தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டடர் பிரேம்ஆனந்த் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற கொண்டு இருந்த ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன்கள் சின்னத்தம்பி (வயது 26), செல்வராஜ் என்ற செல்லக்குட்டி (28) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து உள்ளது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 4 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி மீது ஏற்கனவே 2 வழக்குகளும், செல்வராஜ் என்ற செல்லக்குட்டி மீது 3 வழக்குகளும், இளஞ்சிறார் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.