புதூர்
மதுரை புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாரதியார் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை சோதனையிட்ட போது அவர்கள் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பூவரசன் (வயது 27), சண்முகசுந்தரம்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.600, 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை செல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அழகர் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.