குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குற்ற வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-05 13:41 GMT

அரியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற ரோஹித் குமார் (வயது 33). பகவத்சிங் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (37). ரவுடியாக வலம் வந்த இவர்கள் இருவரையும் ஒரு குற்ற வழக்கில் அரியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் கொணவட்டம் அரசமர தெருவை சேர்ந்தவர் உதயா (23). மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்