தியாகதுருகத்தில் கோவில் மாட்டை திருடிய 3 பேர் கைது

தியாகதுருகத்தில் கோவில் மாட்டை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2023-04-22 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை நேற்று 3 பேர் திருடி சென்றனர். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதயராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்