புதுச்சத்திரம் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது
புதுச்சத்திரம் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;
புதுச்சத்திரம்,
கடலூர் புதுச்சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்த இரும்பு பொருட்களை நேற்று அதிகாலை 3 பேர் திருடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள், அவர்களை கையும் களவுமாக பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆலப்பாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் (வயது 36), குறிஞ்சிப்பாடி அருகே தீர்த்தனகிரியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50), குமார் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.