லாரியில் இருந்து டீசல் திருடிய 3 பேர் கைது

விருதுநகரில் லாரியில் இருந்து டீசல் திருடிய 3 பேர் கைது செய்யப்ட்டனர்

Update: 2022-11-17 18:55 GMT

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகம் இந்நகர் என்.ஜி.ஓ.காலனியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் வாகனங்களை வேலுச்சாமி நகரில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இப்போலீஸ் பிரிவில் பணியாற்றும் சரவணன் வாகனங்களை சோதனை செய்ய அதிகாலையில் சென்றபோது இந்நகர் அல்லம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 23), நேருஜி சர்ச் தெருவை சேர்ந்த முத்துச்சங்கிலி (23), சீனிவாசன் (20) ஆகிய 3 பேரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்து டீசலை திருடி கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 70 லிட்டர் டீசல் இருந்த ஒரு கேனை பறிமுதல் செய்த போலீஸ்காரர் சரவணன், அந்த 3 பேரையும் பாண்டியன் நகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்