மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பேட்டை:
நெல்லை மேலப்பாளையம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் இசக்கியப்பன் (வயது 23). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை பேட்டை வீரபாகு நகர் வங்கியின் முன்பாக நிறுத்திவிட்டு சென்று உள்ளே சென்றார். வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், டவுணை சேர்ந்த பரமசிவன் மகன் இசக்கி (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இசக்கியப்பனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இசக்கியை பாளையங்கோட்டை சிறையிலும், மற்ற இருவரையும் நெல்லை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.