லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 144 லாட்டரி சீட்டுக்கள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று நந்தனார் காலனி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக வெங்கடாச்சலம் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுக்கள், ரூ.360 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சின்னாம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக நடராஜன் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 240 லாட்டரி சீட்டுக்கள், ரூ.230 பறிமுதல் செய்யப்பட்டது.