லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைமை தபால் நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காதல் அலி கான் (வயது 40), ஜஹாங்கீர் பாட்ஷா (70) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7,040 மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த குருவிகரம்பை குறவன்கொல்லை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (31) என்பவரை கைது செய்தனர்.