கஞ்சா விற்ற 3 பேர் கைது
அம்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அம்பை பஸ்நிலையம் அருகே தெற்கு கல்லிடைக்குறிச்சி, புதுகாலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 34), அம்பை புதுகாலனி வேலாயுதநகரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (26), அம்பை பெரியகுளம் இசக்கிதுரை என்ற சுபாஷ் (25) ஆகியோர் கஞ்சா விற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, 86 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.