கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
வீரவநல்லூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகிக்கும்படி இருசக்கர வாகனத்தில் வந்த பிரம்மதேசத்தை சேர்ந்த சின்னதம்பி (வயது 54), புதுக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து (19), கிளாக்குளத்தை சேர்ந்த சொர்ணமுத்து (33) ஆகியோரை சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.