கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-12-15 19:30 GMT

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் செட்டியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவரது பையில் 250 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் செட்டியம்பட்டியை சேர்ந்த கலிமுல்லா (வயது 25) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல் செம்படமுத்தூர் அருகே அம்மனேரி கூட்டு ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு கஞ்சா வைத்திருந்த அஜித் (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் ஓசூரில் நந்திமங்கலம் முனீஸ்வரன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த அசோக் (22) என்பவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்