மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-07 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வனப்பணியாளர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகம் உலிக்கல் சுற்று, புளியமரத்துக் காடு ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஆற்றுப்பகுதியில் இறந்துக்கிடந்த புள்ளிமானின் இறைச்சியை வெட்டி, சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கல்லார் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 40), சிவக்குமார் (33), கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 21), என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வன உயிரினக் குற்ற வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்