நிதி நிறுவன அதிபரை தாக்கிய 3 பேர் கைது

தூசி அருகே நிதி நிறுவன அதிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-03 12:19 GMT

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 31),

இவர் புதுப்பாளையம் கூட்ரோட்டில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணம் வாங்கி இருந்தார். இதனை முறையாக செலுத்தாததால் அவருக்கு பிரேம்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பிரேம்குமார் கடந்த 1-ந் தேதி மாலை பணம் வசூல் செய்ய சென்று கொண்டிருந்தார்.

அப்போது சந்திரசேகரனின் உறவினர்கள் பாக்கியராஜ் (39), ஹரிகிருஷ்ணன் (24), ஆகாஷ் (19) ஆகிய 3 பேரும் அவரை வழி மடக்கி ஓட ஓட விரட்டி கருக்கலால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரேம்குமார் தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, பாக்கியராஜ் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்