தந்தை- மகனை தாக்கிய 3 பேர் கைது

தந்தை- மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-11 18:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரும் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் குடிபோதையில் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதனை மனதில் கொண்ட சுரேஷ், துரைசாமி (56), முருகன் (56) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமாரையும், அவரது தந்தை மகாலிங்கத்தையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்