சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
கந்தம்பாளையம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அடுத்த பாமா கவுண்டம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே உள்ள முட்புதரில் சேவல் சூதாட்டம் நடப்பதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஈரோடு பாசூரை சேர்ந்த பழனிசாமி மகன் ஆனந்தன் (வயது 36), அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் சக்திவேல் (25), சோழசிராமணியை சேர்ந்த சின்னுசாமி மகன் கந்தசாமி (37) ஆகிய 3 பேர் சேவல் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரத்து 700 மற்றும் இருசக்கர வாகனங்கள் 2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.