சென்னை ஐகோர்ட்டில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.;

Update:2024-09-23 17:52 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.பூர்ணிமா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் மற்றும் சென்னை தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளிடா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதி ஆர்.பூர்ணிமா, கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றி தற்போது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தார்.

நீதிபதி எம்.ஜோதிராமன், திருத்தணியைச் சேர்ந்தவர். இவரும் 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதிவாளராக பணியாற்றினார்.

அதேபோல, நீதிபதி ஏ.டி.மரியா கிளிடா, 1995-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்