3 மடிக்கணினிகள் திருட்டு
கல்லூரி மாணவிகளின் 3 மடிக்கணினிகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
காட்பாடி
காட்பாடியில் உள்ள ஒரு விடுதியில் கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இதில் 2 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய 3 மடிக்கணினிகள் திருட்டு போனது.
இதுகுறித்து அவர்கள் இருவரும் தனித்தனியாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.