412 கிராமங்களுக்கு 3 லட்சம் தேசிய கொடி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 கிராமங்களுக்கு 3 லட்சம் தேசிய கொடியை கலெக்டர் வழங்கினார்.;

Update: 2022-08-12 15:44 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா 15-ந் தேதி(திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 412 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்காக கலெக்டர் ஷ்ரவன் குமார், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 889 தேசிய கொடியை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் இன்று(சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும். மேலும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை கொண்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும். ஊராட்சி மன்ற தலைவருக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்