ரூ.3¾ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.3¾ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;

Update: 2022-12-28 19:33 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.3¾ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தோவாளை ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அழகன்கோணம் இசக்கியம்மன் சாலையில் மேம்படுத்தப்பட்ட சாலை பணியை பார்வையிட்டேன். பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடம் பார்வையிடப்பட்டது.

கூடுதல் பள்ளி வகுப்பறைகள்

மேலும் ஆரல்வாய்மொழி தானுமாலயான்புதூரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ்

ரூ.46 லட்சம் செலவில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.68.70 லட்சம் மதிப்பில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டேன்.

ரூ.3¾ கோடி வளர்ச்சிப்பணிகள்

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மீனாட்சி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.57 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டிருந்த பணிகள் என மொத்தம் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்