கோவில்பட்டி உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மகாலட்சுமி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சுசீலா(கோவில்பட்டி)் சுப்புலட்சுமி(கயத்தாறு), சசிகுமார்(விளாத்திகுளம்) நிஷாந்தினி(ஓட்டப்பிடாரம்), கிருஷ்ண குமாரி(எட்டயபுரம்), உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், தேர்தல் துணை தாசில்தார் சங்கர் நாராயணன் மற்றும்
அரசியல் கட்சி சார்பில் நகர தி.மு.க.செயலாளர் கருணாநிதி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி நகர துணை செயலாளர் முனியசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோஸ்வா, பா.ஜனதா நகரசபை கவுன்சிலர் விஜயகுமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் 286. ஆண்கள் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 776 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேரும், மற்றவர்கள் 29 பேரும், ஆக மொத்தமாக மொத்த வாக்காளர்கள் 2லட்சத்து 55 ஆயிரத்து 513 பேர் உள்ளனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் 260. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 416 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 932 பேரும், மற்றவர்கள் 16 பேரும், ஆக மொத்தமாக ் 2 லட்சத்து 13 ஆயிரத்து 364 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்குச் சாவடிகள் 262. இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 562 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 966 பேரும், மற்றவர்கள் 48 பேரும், ஆக மொத்தமாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 576 வாக்காளர்கல் உள்ளனர். இந்த 3 ெதாகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.