காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-13 18:45 GMT

தென்காசி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் நேற்று ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு காரில் 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடையம் செக்கடியூர் கீழத்தெருவை சேர்ந்த கனகராஜ் (வயது 29), அருணாச்சலம்பட்டி வடக்கு தெரு நவநீதன் (41) மற்றும் கீழக்கடையம் அம்பேத்கர் தெரு சதீஷ்குமார் (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை, காருடன் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்