ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ஆலங்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-05 18:45 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் பல்வேறு இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குளம் அருகே லோடு ஆட்டோவில் அரிசி கடத்தி வந்ததாக நெட்டூரை சேர்ந்த சண்முகநாதன் (வயது42), குறிப்பன்குளத்தை சேர்ந்த முருகன் (48), வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த தங்கவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லோடு ஆட்டோ மற்றும் 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்