ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-18 19:17 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி விற்ற இடையாத்தியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது49), ரவி (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் இருந்து ரூ.1,350-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் திருவோணத்தை அடுத்துள்ள பத்துப்புளிவிடுதி கிராமத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த முருகேசன் (45) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்து ரூ.1,400-ஐ பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்