90 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் பருவ பயிற்சி
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் 90 ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.;
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடந்தன. கீழ்பென்னாத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில் 90 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். 3 நாள் நடந்த பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் இசையருவி சரவணராஜ், மொளுகு ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கான கையேடுகளை வழங்கினார்.