தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சால் யாரும் சிகிச்சை பெறவில்லை.எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல்.8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதகவும் ,தேவையான அளவு மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .