தென்காசி அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 27 பேர் கைது

தென்காசி அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 27 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-10-21 18:45 GMT

தென்காசி அருகே உள்ள கண்டமங்கலத்தில் ஒரு மனமகிழ் மன்றம் இயங்கி வருகிறது. இங்கு சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் உத்தரவின் பேரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.41 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்