தமிழகத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-26 16:12 GMT

சென்னை,

தமிழகத்தில் இன்று புதிதாக 14 ஆண்கள், 13 பெண்கள் உள்பட மொத்தம் 27 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் உள்பட மொத்தம் 10 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. திருச்சி, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 9 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 6 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 160 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது 293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்