26 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்கள்

பாபநாசத்தில் 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-09-04 20:54 GMT

பாபநாசம்:

தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகியவை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.அதன் ஒருபகுதியாக பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 85 ஆயிரம் வீதம் 26 விவசாயிகளுக்கு, ரூ.21 லட்சத்து 62 ஆயிரம் மானியத்தில், 26 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சிகள் அலுவலர் சுதா மற்றும் வேளாண்மை பொறியியல்துறை அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்