வேன் கவிழ்ந்து 25 தொழிலாளர்கள் படுகாயம்
ஆற்காடு அருகே டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் வேன் கவிழ்ந்து 25 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.;
ஆற்காடு அருகே டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் வேன் கவிழ்ந்து 25 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பூதேரி புல்லவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 விவசாய கூலி தொழிலாளர்கள் நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வளவனூர் கிராமத்திற்கு நெல் நடவு வேலைக்கு வந்துள்ளனர். பின்னர் வேலையை முடித்துவிட்டு மாலையில் வேனில் வீடு திரும்பினர். பிரகாஷ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார்.
வளவனூர் கூட்ரோடு அருகே சென்றபோது வேன் டிரைவர் பிரகாசத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி சாலையின் ஓரம் கவிழ்ந்து உள்ளது.
25 தொழிலாளர்கள் காயம்
இதில் வேனில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைபார்த்ததும், அங்கிருந்தவர்கள், அவர்களை உடனடியாக மீட்டு செய்யார் மற்றும் ஆற்காடு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.