மாங்காட்டில் இருந்து கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 25 விநாயகர் சிலைகள்

மாங்காட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது.;

Update: 2023-09-24 12:25 GMT

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி, மாங்காடு, காட்டுப்பாக்கம், போரூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடலில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 25 சிலைகள் வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாங்காட்டில் வைத்து அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது.

இதையடுத்து விநாயகர் சிலைகளை ஏற்றிகொண்டு மேள தாளங்கள் முழங்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கடலில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது. ஒவ்வொரு விநாயகர் சிலை இருந்த ஒவ்வொரு வாகனத்திற்கும் தனியாக ஒரு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்