25 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

விருதுநகர் அருகே 25 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-12-28 18:56 GMT


விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விருதுநகர் அருகே எரிச்சநத்தம் மாசானியம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனில் தலா 25 கிலோ கொண்ட 25 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் 25 ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வேனில் இருந்த மதுரை மாவட்டம் மேலூர் பர்மா காலனி நொண்டி கோவில்பட்டியை சேர்ந்த சரவணகுகன் (வயது 39) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்