கடைகளில் 247 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி கடைகளில் 247 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-03-28 18:45 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். இதில் 13 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 247 பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 13 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்