தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 244 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு-ரூ.36 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

தா்மபுாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 244 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உாியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.;

Update: 2023-01-13 18:45 GMT

திருட்டு, கொள்ளை

தா்மபுாி மாவட்டத்தில் 25 போலீஸ் நிலையங்கள், 3 மகளிா் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசாா் பணியாற்றி வருகின்றனா். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 150-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டா்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனா்.

தா்மபுாி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணிகளில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களும், இரவு நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட குற்றத்தடுப்பு போலீசாரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். போலீசாா் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் ஆங்காங்கே திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.

ரூ.35.93 லட்சம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவாி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 244 திருட்டு, கொள்ளைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த திருட்டு, கொள்ளை வழக்குகளில் 203 வகையான நகைகள் மற்றும் பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.35.93 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உாியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்