240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-28 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கழுகேர்கடை விலக்கு பகுதி. இந்த பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி(வயது 45), பிரபாகர் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேன் மற்றும் புகையிலை ெபாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகையிலை பாக்கெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை, பூவந்தி, திருப்புவனம் வழியாக கொண்டு வந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்