ரூ.2.40 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி

ரூ.2.40 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகா் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-19 19:00 GMT

பணகுடி:

காவல்கிணறு அருகேயுள்ள பெருங்குடி வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அங்கு புதிய தார் சாலை அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி புதிய சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அப்பகுதி மக்கள் கூறுகையில், பெருங்குடி, பெருங்காளிபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொண்ட சபாநாயகர் அப்பாவு கண்டிப்பாக தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விரைவில் நிதி ஒதுக்கி நிழற்குடை அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, காவல்கிணறு பஞ்சாயத்து தலைவர் இந்திரா சம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்