9 தாலுகாக்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
வடகிழக்கு பருவமழை: 9 தாலுகாக்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கலெக்டர் தகவல்;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெள்ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் வடகிழக்கு பருவ மழைக்கான கட்டுப்பாட்டறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால மையத்தை 1077 மற்றும் 04146-223265 என்ற தொலைபேசி எண்களிலும், 72001-51144 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்கள், 3 நகராட்சிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புயல் கட்டுப்பாட்டுஅறை அவசர கால மையம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கட்டுப்பாட்டு அறை-04146-222554, 94450-00525, விக்கிரவாண்டி கட்டுப்பாட்டு அறை-04146-233132, 9655750073, வானூர் கட்டுப்பாட்டு அறை-0413-2677391, 9445000526, திண்டிவனம் கட்டுப்பாட்டு அறை-04147-222090, 9445000523, மரக்காணம் கட்டுப்பாட்டு அறை- 04147-239449, 9445461915, செஞ்சி கட்டுப்பாட்டு அறை-04145-222007, 9445000524, மேல்மலையனூர் கட்டுப்பாட்டு அறை-04145-234209, 93445-78941, கண்டாச்சிபுரம் கட்டுப்பாட்டு அறை-04153-231666, 94430-48924, திருவெண்ணய்நல்லூர் கட்டுப்பாட்டு அறை-04153-234789, 94861-86829, விழுப்புரம் நகராட்சி கட்டுப்பாட்டு அறை-04146-222206, 73973-89327, திண்டிவனம் நகராட்சி கட்டுப்பாட்டு அறை-04147-225161, 73973-89326, கோட்டக்குப்பம் கட்டுப்பாட்டு அறை-0413-2237062, 91503-75343 என்ற எண்ணிற்கும் மழை வெள்ளபாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.