இனிமேல் 24 மணி நேரமும் குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் - குடிநீா் வழங்கல் வாரியம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.;

Update:2023-12-01 01:59 IST

சென்னை, 

வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வாரியம் சாா்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் தொடா்பாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவிப்பதுக்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்: 044-4567 4567 மற்றும் கட்டணமில்லா எண் 1916- ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகாா்களும் உனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்