24 அடி உயர பாகுபலி சிலை பிரதிஷ்டை
வந்தவாசி அருகே 24 அடி உயர பாகுபலி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.;
வந்தவாசி
வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஜெயின் கோவில் உள்ளது இந்த கோவில் முன்பகுதியில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சிலை வைக்க ஜெயின் சமூகத்தினர் முடிவு மேற்கொண்டு இதற்கான சிலை வடிக்கும் பணி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டது.
சிலை வடிவமைப்புகள் முடிவு பெற்ற நிலையில், 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சிலையை 20 டயர் கொண்ட லாரியில் மாமல்லபுரத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி பொன்னூருக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக பாகுபலி சிலை மேல்மருவத்தூர், கீழ்கொடுங்கலூர், பிருதூர் கிராமம் வழியாக வந்தபோது கிராம மக்கள் பாகுபலி சிலைக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
பின்னர் வந்தவாசி, திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்ரோட்டு வழியாக பொன்னூர் கிராமத்திற்கு சென்றடைந்தது. நேற்று காலை 2 ராட்சத கிரேன் மூலம் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிலை நிறுவப்பட்டது.
இதையடுத்து சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பாகுபலி சிலையை தரிசனம் செய்தனர்.