பொதுமக்களை அச்சுறுத்திய 24 நாய்கள் பிடிபட்டன

மேலப்பாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய 24 நாய்கள் பிடிபட்டன.;

Update: 2023-06-11 19:14 GMT

மேலப்பாளையம் பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி ரோடு, ஆமின்புரம், சித்திக் நகர், பாத்திமா நகர், அன்னை ஹஜிரா கல்லூரி சாலை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த 24 நாய்கள் பிடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்