230 மதுபாட்டில்கள் பறிமுதல்
சுரண்டை அருகே 230 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
சுரண்டை:
சேர்ந்தமரத்தில் இருந்து கள்ளம்புளி செல்லும் சாலையில் உள்ள மதுபான கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் 3 பேர் மதுபாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
அப்போது போலீசார் கடம்பன்குளத்தைச் சேர்ந்த முருகையா (வயது 37), மற்றும் வேலப்பநாடாருரை சேர்ந்த கணேசன் (47) ஆகிய இருவரையும் விரட்டி பிடித்து கைது செய்தனர். நொச்சிகுளம் மேலத் தெருவை சேர்ந்த இளையபாண்டி (40) தப்பி ஓடி விட்டார். கைது செய்த நபர்களிடம் இருந்து 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.