23 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கு - 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு

23 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது

Update: 2023-01-12 20:26 GMT


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மு.கல்லுப்பட்டி மயானப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா பதுக்கியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் தெற்குத்தெரு எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த காரமணி, தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர்தான் என்பது தெரிந்தது.

இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுரேந்திரன் ஆஜரானார்.

விசாரணை முடிவில் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்