தூத்துக்குடியில்22 பிஷப்புகள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி
தூத்துக்குடியில்22 பிஷப்புகள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. வியாழக்கிழமை ஆயர் பேரவை கூட்டம் நடக்கிறது.
தூத்துக்குடியில் 22 பிஷப்புகள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நேற்று மாலை நடந்தது. இன்று(வியாழக்கிழமை) ஆயர் பேரவை கூட்டம் நடக்கிறது.
பேரவை கூட்டம்
தமிழக திருச்சபை ஆன்மிக வளர்ச்சி, சமூக வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்காக தமிழ்நாடு-பாண்டிச்சேரி கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டம் தொடங்கப்பட்டு 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, ஆயர் பேரவை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள பிஷப் இல்லத்தில் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய வளாகத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.
திருப்பலி
திருப்பலிக்கு சென்னை மயிலாப்பூர் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பிஷப்புகள் தாமஸ் அக்குவினாஸ் (கோவை), ராயப்பன் (சேலம்), தேவதாஸ் அம்புரோஸ் (தஞ்சை), அந்தோணிசாமி (கும்பகோனம்), ஸ்டீபன் அந்தோணிசாமி (தூத்துக்குடி), அந்தோணிசாமி (பாளையங்கோட்டை), நசரேன் (கோட்டாறு) உள்பட 22 மறைமாவட்டங்களை சேர்ந்த பிஷப்புகள் பங்கேற்று திருப்பலி நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) ஆயர் பேரவை கூட்டம் நடக்கிறது.