மது விற்ற 22 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 18:17 GMT

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 13-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 163 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்