21 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

21 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2023-05-02 17:57 GMT

21 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, 96 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், தனித்துவம் வாய்ந்த 82 நபர்களுக்கு அடையாள அட்டைகள், 16 நபர்களுக்கு ஆதார் அட்டைகள், 10 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டைகள், 8 பேருக்கு காதொலி கருவிகள், நடைபயிற்சி உபகரணங்கள் என 212 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் பிரபாவராணி, குழந்தைகள் நல மருத்துவர் தமிழரசன், மருத்துவர்கள் தன்வீர் அகமது, கார்த்திகேயன், அருணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்