மயானக்கொள்ளையையொட்டி 21 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

மயானக்கொள்ளையையொட்டி 21 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-18 17:26 GMT

மயானக்கொள்ளையையொட்டி 21 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், விருதம்பட்டு, ஓல்டுடவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அங்காளம்மனை அலங்கரித்து பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின்னர் அங்கு வைத்து சூரை விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோன்று குடியாத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறும்.

மயானக்கொள்ளை திருவிழாtன்று சட்டம், ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க வேலூர் நகரில் 11, காட்பாடியில் 5, குடியாத்தத்தில் 5 என்று மொத்தம் 21 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்