மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிப்பு
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிக்கப்பட்டனர்.;
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 22 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 பேர், கொளத்தூரில் 3 பேர், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.