திருமூர்த்தி மலையில் சாரல் மழை - பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை...!
திருமூர்த்தி மலையில் சாரல் மழை பெய்வதால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.;
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் உடல் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆறுகள் ஓடைகளில் நீர்வரத்து அளித்து வருகிறது. இதில் குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அனைவரும் வரிசையில் நின்று குறித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மலைப்பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. அதுமட்டுமன்றி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பலத்த மழை பெய்வதற்கான சூழலும் அந்த பகுதியில் நிலவிய இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு ஆனந்தமாக குளிக்கலாம் என வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அருவியில் ஏற்படும் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.