"பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு துப்பாக்கிச்சூடு இல்லை" - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட இல்லை என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.;

Update: 2022-05-08 18:54 GMT
கன்னியாகுமரி,

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலங்களாக உள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்தடை ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தினந்தோறும் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பின்பு பிரதமர் மோடியின் தலையீட்டால் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட இல்லை. அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்முடைய மீனவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது.

மேலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மின்தடை என்பதே இல்லாமல் இந்தியா ஒரு மின்மிகை நாடாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாகவே இன்று மின்தடை ஏற்படுகிறது. 

என்று கூறினார்.

மேலும் செய்திகள்