பெண்ணை தாக்கிய சகோதரிகள் மீது வழக்கு
வம்பாகீரப்பாளையத்தில் சொத்து பிரச்சினைகாக பெண்ணை தாக்கிய சகோதரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு அஞ்சலிதேவி, செல்வி, சாந்தி, மாலதி ஆகிய சகோதரிகள் உள்ளனர். சொத்து பிரச்சினை தொடர்பாக செல்வத்துக்கும், சகோதரிகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இந்தநிலையில் செல்வத்திற்கு ஆதரவாக அஞ்சலிதேவி செயல்பட்டார். சம்பவத்தன்று செல்வத்துக்கு போன் செய்த சாந்தி, அவரது மனைவியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அஞ்சலிதேவியின் கணவர் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த சாந்தி, செல்வி, மாலதி ஆகியோர் சேர்ந்து அஞ்சலிதேவியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.